மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

Updated On :22 மே 2013, 2:30 am IST

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மே 18-ஆம் தேதி கூட்டியது. அப்போது ஏழு நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிப்போம் என உறுதியளித்தது. ஆனால் இதுவரை தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

 மேலும் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளிப்படையான தேர்தலை நடத்த விரும்பவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றார்.

 முன்னதாக மாநிலத் தேர்தல் ஆணையர் மீரா பாண்டே திங்கள்கிழமை கூறியதாவது:

 நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இந்த வாரத்துக்குள் முறையாக அறிவிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.