உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முனைப்புடன் உள்ள காங்கிரஸ் அது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இது விஷயமாக காங்கிரஸ் உயர்நிலைக் குழு தில்லியில் சனிக்கிழமை கூடியது.
இதில், உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த அடுத்த கட்ட முயற்சியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை திங்கள்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
அதில் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பொதுக் கருத்தை ஏற்படுத்த ஆளும் கூட்டணி முயற்சி மேற்கொள்ளும். அதற்கு முன்பாக தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டால், அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த இருக்கிறார்.
முன்னதாக நடைபெற்ற காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சோனியா காந்தியின் கனவுத் திட்டமாக உணவுப் பாதுகாப்பு மசோதா உள்ளது.
இதன்படி 67 சதவீதம் மக்களுக்கு ஒரே சீராக ரூ.1 முதல் 3-க்கு மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியம் நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்க இந்த மசோதா வகை
செய்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் பல்வேறு பிரச்னைகளால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


