வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வெள்ள பாதிப்பு: இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் மீட்புப் பணி தீவிரம்

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Updated On :22 ஜூன் 2013, 12:55 am IST

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பலத்த மழையினால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாலும், நிலச்சரிவினாலும் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏராளமானோர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபடுத்தப்பட்டன. கின்னெளரில் சிக்கித் தவித்து வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இது தவிர பூஞ்ச், நகோ, கஸô உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நிறைய பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களையும், கூடாரம் அமைப்பதற்கான உபகரணங்களையும் ராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.

பிரணாபின் பயணம் ரத்து: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இமாச்சலப் பிரதேசத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதால், பிரணாப் தனது பயணத்தை ரத்து செய்தார்.

13 மாவட்டங்களுக்கு தலா ரூ. 50 லட்சம்: உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களில் பெய்த பலத்த மழையினால் 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மீட்புப் பணிகளுக்காக 13 மாவட்டங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

அங்கு வியாழக்கிழமை முதல் மழை பெய்யவில்லை என்றாலும், சாரதா மற்றும் கங்கை ஆறுகளில் வெள்ள நீர் வடியவில்லை. வெள்ளத்தின் காரணமாக யமுனை நதி பாலத்தின் வழியே கடந்த 4 நாள்களாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. இதனால், உத்தரப் பிரதேசம்-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.