நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நக்சலைட்டுகளுடன் மோதல்: காவலர் சாவு; 3 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 12:57 am IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

கோண்டாகான் மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீஸôர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். கேஷ்கால் நகரில் உள்ள பார்கான் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை வழிமறித்த 40 நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சண்டையில் காவலர் சஞ்சய் மாண்டவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமைக் காவலர் கமலேஷ், காவலர்கள் தனசிங், அமர் சச்லாம் ஆகியோர் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்திய பின், நக்சலைட்டுகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கோண்டாகான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டி.ஷ்ரவன் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் நக்சலைட்டுகள் பலருக்கும் காயமேற்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை சக தீவிரவாதிகள் மீட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.