நிதி முறைகேடு புகார் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் கெளதம் தேவிடம் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.
கொல்கத்தாவில் உள்ள சி.ஐ.டி. போலீஸாரின் தலைமையகத்தில் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பான மற்ற தகவல்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கெளதம் தேவ், ""சி.ஐ.டி. போலீஸாரை திருப்திப்படுத்துவது (விசாரணையில் அவர்கள் விரும்பும் பதில்களை கூறுவதன் மூலம்) என் வேலையல்ல. முதல்வர் மம்தா பானர்ஜி, விசாரணை என்ற பெயரில் என்னை இரண்டு மணிநேரம் சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்திருக்க விரும்பினார். அதைத்தான் போலீஸார் செய்தனர்'' என்றார்.
முன்னதாக பெங்கால் கிரீன்ஃபீல்டு வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தால்டாலா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெங்கால் கிரீன்ஃபீல்டு உள்ளிட்ட 8 ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இடதுசாரி கூட்டணியின் தலைவர் பிமன் போஸ் கூறுகையில், ""பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


