சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பொதுச் செயலர் கொலை: விசாரிக்க 3 நபர் குழு அமைத்தது பாஜக

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு மூன்று நபர் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்துள்ளார்.

Updated On :22 ஜூலை 2013, 3:07 am IST

தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு மூன்று நபர் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்துள்ளார்.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரும் உறுப்பினர்களாக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மற்றும் கர்நாடக எம்.பி. அனந்த் ஹெக்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் குறித்து விசாரித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இக்குழுவை ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் சமீப காலமாக தங்கள் கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.