செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சாவு

வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே மூன்று நாள்களாக ராணுவம் நடத்திவரும் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 1:02 am IST

வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே மூன்று நாள்களாக ராணுவம் நடத்திவரும் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கையில் ஹஃப்ருடா வனப்பகுதியில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அன்று அதிகாலை ஏராளமான ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சிலர் எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவ முற்பட்டனர். ஆனால் ராணுவத்தால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடிப்பதற்கான சண்டையின்போது, ஹஃப்ருடா வனப்பகுதியில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் என்று கூறினார்.

இத்துடன் கடந்த நான்கு நாள்களில் மட்டும் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே செவ்வாய்க்கிழமை மாச்சில் பகுதியில் நான்கு பயங்கரவாதிகளும், திங்கள்கிழமை கேரன் பகுதியில் ஒரு பயங்கரவாதியும் ராணுவத்துடனான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர்.

ஜூலை 9-ஆம் தேதி இதே கேரன் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹஃப்ருடா வனப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.