மார்க்சிஸ்ட் கட்சி கேரள மாநில செயலாளரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பினரயி விஜயனுக்கு நீர்மின்திட்ட ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ கூறியது.
3 நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒப்பந்தம் வழங்கியதில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ சமர்ப்பித்த அறிக்கையில், ஒப்பந்தம் குறித்த உண்மைகளை விஜயன் அமைச்சரவையிடம் மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரத் துறை செயலாளர் தடுத்தும் விஜயன் ஒப்பந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதாகவும் சி.பி.ஐ தெரிவித்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு விஜயன் அளித்திருந்த மனுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்தது.
1997-ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி லாவ்லின் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் 374 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக 2012-ல் 9 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் விஜயன் ஏழாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளோட்டம் வெல்லட்டும்

காலடியின் தடங்கள்

செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


