கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

வெள்ளோட்டம் வெல்லட்டும்

அறிவியல் மாணவர்கள் மட்டுமல்லாமல், பாமர மக்களும் அறிவியலை அறிய உதவும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதே இந்த நூலின் சிறப்பு.

News image
Updated On :15 ஜூன் 2026, 6:13 pm IST

வெள்ளோட்டம் வெல்லட்டும் - இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு; தொகுப்பாசிரியர்- க.செல்வி; பக். 112; ரூ. 180; திசையெட்டு வெளியீடு, சென்னை-600 039, ✆ 044-2597 6458.

டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, 'தொழில்நுட்பம் மக்களுக்காகவே' என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து 13 நூல்களை எழுதியுள்ள அவருடைய ஆராய்ச்சி சோதனைகள், வெற்றி பெற்ற விதம், அதில் ஏற்பட்ட பிரச்னைகள், சுவாரஸ்ய நிகழ்வுகளை போர் விமானங்கள் தயாரிக்கும் ராணுவ அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றும் தொகுப்பாசியர் தொகுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உபயோகிக்கப்படும் பீரங்கிகள், கப்பல்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், பாரம் சுமக்கும் வாகனங்கள் உள்ளிட்ட ஒவ்வொன்றும் எதிர்கொள்ளும் தடைகள், சிரமங்கள் நூலில் சுட்டிக் காட்டப்பட்டப்பட்டு அதில் இருந்து விடுபடும் விவரங்களும் செயல்முறைச் சோதனைகளாலும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

பறவைகள் மோதலால் விமானங்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் தவிர்க்கச் செயல்படுத்தப்படும் உத்திகள், விமானத்தில் மனிதர்களை ஏற்றிப் பறக்க வைக்கப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ளக் கூடிய சோதனைகள் போன்றவை வியக்க வைக்கின்றன.

விமான பாகங்களுக்கான மருத்துவச் சோதனை, விமான விபத்துகளைத் தடுக்கும் தாவரவியல் தத்துவம், ஏவப்பட்ட ஏவுகணையை சுயமாக அழிப்பது எப்படி, போர்க்கப்பலைக் காக்கும் தொழில்நுட்பங்கள், தண்ணீர் தொட்டியில் கப்பல், பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்ட 21 தலைப்புகளில் கட்டுரைகளில் அறிவியல் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.

பொதுமக்களும் அறிவியல் தமிழை அறிய வேண்டும் என்ற விஞ்ஞானிகளின் முயற்சி பாராட்டத்தக்கது. அறிவியல் மாணவர்கள் மட்டுமல்லாமல், பாமர மக்களும் அறிவியலை அறிய உதவும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதே இந்த நூலின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.