பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

அமீர் ஐதர் கான்

சென்னையில் அமீர் ஐதர் கான் தங்கியிருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகள், காங்கிரஸ் இயக்கத்தின் தொடர்புகள், தென்னிந்தியாவில் எப்படி கம்யூனிஸம் தோன்றியது ஆகிய வரலாற்றுத் தகவல்கள் படித்தறிய வேண்டியவை.

News image
Updated On :20 ஜூலை 2026, 6:46 pm IST

அமீர் ஐதர் கான்-தென் இந்தியாவில் கம்யூனிட் கட்சியின் துவக்கம்- தமிழில்: அருணானந்த்; பக். 144; ரூ. 180; அறம் பப்ளிகேஷன்ஸ், முள்ளிப்பட்டு-632 316, திருவண்ணாமலை மாவட்டம், ✆ 91507 24997.

பொதுவுடைமைக் கட்சியினர் நாடு விடுதலைக்கு முன்பும், பின்பும் எத்தனையோ போராட்டங்கள், வழக்குகள், தலைமறைவு வாழ்வு போன்ற இன்னல்களை எதிர்கொண்டே கம்யூனிஸம் வளர்த்தார்கள் என்பது வரலாறு. இந்த பொதுவுடைமைவாதிகளில் பலர் உலகுக்கு தெரியாமலேயே போய்விட்டனர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பை ஏற்படுத்தி, அதை அகில இந்திய கட்சியின் கிளையாக உருப்பெறச் செய்த பெருமை தோழர் அமீர் ஐதர் கானையே சாரும். பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியரான அமீர், அங்கிருந்து மும்பை வழியாக சென்னை வந்து சங்கர் என்ற புனைபெயரில் வசித்து இயக்க வேலைகளைச் செய்தார்.

அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கு அப்போதைய அரசு எத்தகைய நெருக்கடிகளைக் கொடுத்தது, சென்னை, கோவை, வேலூர் சிறைகளில் பட்ட துயரங்களின் பதிவுகள், சக தோழர்களின் துன்பங்கள், இயக்கம் வளர்க்க அந்தகாலகட்டத்தில் எத்தகைய உத்திகளைக் கையாண்டார்கள், காவல் துறையினர் அவர்களை எப்படியெல்லாம் பின்தொடர்ந்து வந்து கண்காணித்தார்கள், கைது செய்தார்கள், சிறைக்குள் தனிமைச் சிறை, தூக்கு தண்டனை நிறைவேற்றும் கொட்டடியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தூக்கு கைதிகளின் தண்டனை நிறைவேற்றத்தை பார்க்கும் கொடுமை, தலைமறைவாக வாழ எத்தகைய தியாகங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட சம்பவங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் அமீர் ஐதர் கான் தங்கியிருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகள், காங்கிரஸ் இயக்கத்தின் தொடர்புகள், தென்னிந்தியாவில் எப்படி கம்யூனிஸம் தோன்றியது ஆகிய வரலாற்றுத் தகவல்கள் படித்தறிய வேண்டியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.