மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் "ஐஎன்எஸ் விக்ராந்த்' இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

அதிநவீன தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட "ஐஎன்எஸ் விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க் கப்பல், கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற உள்ள விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2013, 2:12 am IST

அதிநவீன தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட "ஐஎன்எஸ் விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க் கப்பல், கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற உள்ள விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இந்திய கடற்படையில் உள்ள பெரும்பாலான விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டவை. இந்தக் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டது. இதன் பலனாக, "ஐஎன்எஸ் விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க் கப்பலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் துவங்கியது.

கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த கப்பல் கட்டும் பணியில், முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்தக் கப்பல் சோதனை ஓட்டத்துக்கு தயாரானது. இந்தக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்று, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் மனைவி எலிசபெத். விழாவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். கடற்படை தளபதி டி.கே. ஜோஷி தலைமையிலான அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து கடற்படை துணை தளபதி ஆர்.கே. தவான் கொச்சியில் நிருபர்களிடம் கூறியது:

உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது. இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தயாரித்து வந்தன.

இந்தக் கப்பல்களை தயாரிக்கும் வல்லமை படைத்த நாடுகளின் பட்டியலில், தற்போது இந்தியாவும் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த விமானம் தாங்கிக் கப்பலில் மிக் 29 ரக விமானங்களும், இலகு ரக விமானங்களும் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 30 விமானங்களை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

மேலும், கப்பலில் இருந்து பிற நாட்டின் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. கப்பலின் மொத்த எடை 37,500 டன். 260 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலின் அகலம் 60 மீட்டர் என்றார் தவான்.

போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துணை தளபதி வி.கே.நாயர் கூறுகையில், இதுவரை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 7000 டன் எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே கட்டுமானம் செய்யப்பட்டன. இத்தகைய பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டுவது இதுவே முதல் முறை. இந்தக் கப்பல் எரிவாயு மூலம் இயக்கப்பட உள்ளது என்றார் அவர்.

கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கே.சுப்பிரமணியன் கூறியது:

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பெரும்பாலும் வணிக ரீதியாக பயன்படும் கப்பல்கள் மட்டுமே கட்டப்பட்டு வந்தன. முதல் முறையாக, இந்தத் தளத்தில் விமானம் தாங்கி போர்க் கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டு இருப்பது சவாலான பணியாகும்.

முதற்கட்ட கப்பல் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது. 2-ஆவது கட்டப் பணியாக, மின்சார அமைப்புகள், காற்றோட்ட வசதிகள் மற்றும் அறைகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவு பெற 4 ஆண்டுகள் ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் பொதுமேலாளர் (திட்டம்) சுரேஷ்குமார் கூறுகையில், கப்பலில் பொருத்தப்பட்ட டீசல் ஜெனரேட்டர்கள் மூலமாக 24 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சக்தியை கொண்டு, கொச்சி நகருக்கே மின்விநியோகம் செய்ய முடியும். கப்பலில் இரண்டு விமானத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் பெய்த பருவமழையால் கப்பல் கட்டுமான பணி பாதிக்கப்பட்டாலும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள், கப்பல் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு விட்டது. கப்பல் கட்டும் பணியில் தினந்தோறும் 850 முதல் ஆயிரம் பேர் வரை ஈடுபட்டு வருகின்றனர் என்றார் சுரேஷ்

குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.