அசாமில் தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் தருண் கோகோய் ஞாயிற்றுக்கிழமை எச்சரிகை விடுத்துள்ளார்.
தனி மாநிலக் கோரிக்கைகள் பற்றி பிரதமர் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும் தருண் கோகோய் தில்லியில் விவாதிக்கவிருக்கிறார்.
தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து தங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கோரி மாநிலத்தில் போராட்டம் வெடித்ததில், சுமார் ஏழு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தருண் கோகோய் கூறும்போது, ""போராட்டத்தை நிறுத்தும்படி அனைவரிடமும் பலமுறை நான் கூறிப்பார்த்துவிட்டேன். ஆனால் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இனியும் கடையடைப்பு, முற்றுகை தொடர்ந்தால் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
போராட்டக்காரர்களுடன் பேசி அமைதியான தீர்வு காணவே விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் ஏதாவது நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்றால் முதலில் வன்முறை அடங்கவேண்டும்.
பிரதமரைச் சந்தித்து அனைவரது கோரிக்கைகளையும் நிச்சயம் எடுத்து சொல்வேன். சோனியா காந்தியையும் சந்தித்து தனி மாநிலக் கோரிக்கைகளைப் பற்றி விவாதிப்பேன்.
போராட்டக்காரர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என்றே நம்புகிறேன்'' என்றார் முதல்வர் தருண் கோகோய்.
பிரதமரைச் சந்திக்க புதி தில்லி புறப்படும் முன்பு கர்பி ஆங்லாங் பகுதியைச் சேர்ந்த தன்னாட்சி மாநிலத்திற்கான கூட்டு செயல்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



