எல்லையில், ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்த இரண்டு பிகார் அமைச்சர்களுக்கு, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
பிகார் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பீம் சிங், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் அகியோருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில், வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரு அமைச்சர்களும் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இருவர் மீதும் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை ஏழு நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் அறிக்கைகள் கட்சிக்கு தருமசங்டத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கட்சியின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீம் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ""ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் என்ற வகையிலும், மாநில அமைச்சர் என்ற வகையிலும் எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் குறித்த கருத்து தேவையற்றது. உங்களது இந்தச் செயல் கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிரானது'' என்று சரத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நரேந்திர சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ""வீரர்கள் கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்கு பங்கில்லை என்ற உங்கள் கருத்து கட்சியின் கொள்கைக்கு எதிரானது. அந்த கருத்தை திரும்பப் பெறுமாறும், மாற்றுக் கருத்தை வெளியிடுமாறும் தனிப்பட்ட முறையில் நான் கேட்டுக்கொண்டும் நீங்கள் அதை செய்யவில்லை'' என்று சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

