நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

காஷ்மீரில் நிலநடுக்கம்

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Updated On :1 செப்டம்பர் 2013, 11:11 pm IST

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார், தோடா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 3.4 அலகுகளாக பதிவானது.

வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளி பகுதிகளில் சென்று தங்கினார்கள்.

இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இதே பகுதிகளில் சனிக்கிழமையும் 2.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.