செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் தவெக அரசு சமரசம் செய்யக்கூடாது: நயினார் நாகேந்திரன்

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் தவெக அரசு சமரசம் செய்யக்கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Vijay | Nainar Nagenthran

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் தவெக அரசு சமரசம் செய்யக்கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை முடக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் சுமார் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றுமாறு, முந்தைய திமுக அரசு பிறப்பித்த அதே அரசாணையை தற்போதைய தவெக அரசும் முன்மொழிவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

அதிகளவிலான கட்டணம் செலுத்தி தனியாரிடம் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் செல்ல முடியாத அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன்களைத் துல்லியமாகக் கணித்து, போட்டிகளில் அவர்களின் பங்கேற்றலை உறுதி செய்யும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை.

தவெக அரசின் இந்த தவறான அணுகுமுறையால், 700 மாணவர்களுக்கு கீழ் இருக்கும் சில கிராமப்புற பள்ளிகளின் மீது உடற்கல்வி ஆசிரியரின் நிழல் கூட படாமல் போய்விடும் என்பது எவ்வளவு பெரிய உரிமை மீறல்? இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா?

கல்விக் கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அரசு சமரசம் செய்யக்கூடாது எனவும், பழைய நடைமுறையின் படியே உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் தொடர வேண்டும் எனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Nainar Nagendran has urged the TVK government not to compromise on the count of physical education teachers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.