செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ்

நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Will soon announce the good news you've been expecting: Raghava Lawrence

ராகவா லாரன்ஸ்

Published On :

நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். என் தாயார் முன்னிலையில் அறிவிப்பேன். நான் ஏதாவது பெரிய முடிவை எடுத்தால் நிச்சயம் மக்களிடம் கேட்பேன். என்னை அரசியலுக்கு வருமாறு இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அழைக்கின்றனர். நீங்கள் அரசியலுக்கு வராமல் வேறு யார் வரப் போகிறார்கள் என் அனைவரும் கூறுகின்றனர். தவெக அரசின் ஒருமாத ஆட்சி நன்றாக இருக்கிறது.

பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடியது தவெக அரசின் நல்ல செயல். மதுக்கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது. கல்வி மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்களின் நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பொறாமையால் தவெக ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆட்சியை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் முன் நீங்கள் என்ன செய்தீர்கள் என யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன். மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கு கொஞ்சம் அவகாசமும் கொடுக்க வேண்டும். தவெகவினர் தற்குறி கிடையாது. என்னுடைய பார்வையில் தவெகவினர் கூர்மையான அம்புக்குறி. அது மலையையே பிளக்கும். முடிவை அறிவித்து அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஆசிர்வாதம் பெறுவேன்.

ரஜினியின் ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் செய்யமாட்டேன். விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காததற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். பேசுபவர்கள் வேண்டுமா செயல்படுவர்கள் வேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வெறுப்பு அரசியல் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு இன்னும் அதிகம் நல்லது செய்வேன். அரசியலுக்கு வந்தால் நான் நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்றார்.

Summary

Actor Raghava Lawrence has stated that he will soon announce the good decision expected by everyone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.