நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளார்.
அரசியல் பிரவேசம் குறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எந்தப் பலனையும் எதிர்பாராமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை.
நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியலில் பணம் சம்பாதிக்கவோ சீட்டோ என்னுடைய நோக்கமல்ல.
என் நம்பிக்கைக்குரிய மற்றும் நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், அவர்களுடன் இணைந்து, ஏற்கெனவே தனிநபராகச் செய்ததைவிட பெரிய அளவில் சமூகத்துக்குச் சேவையாற்றுவேன்.
இன்றைய சூழ்நிலைகள், என்னை அரசியலில் நுழைய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளன.
உங்களின் ஆசிர்வாதத்துடன் இந்த முக்கியமான முடிவை எடுக்க உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடைய அரசியல் புரிதல் மற்றும் அரசியல் முடிவு குறித்த விடியோவை வெளியிடவிருப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
Summary
Actor Raghava Lawrence has announced that he is entering politics
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









