நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கே ஆதரவு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்துக்கே எங்களது முழு ஆதரவு என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Updated On :2 செப்டம்பர் 2013, 2:01 am IST

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்துக்கே எங்களது முழு ஆதரவு என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதை வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா யாத்திரை தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து மாநில மக்களுக்கு அந்தக் கட்சியின் கெüரவத்தலைவர் ஒய்எஸ் விஜயம்மா பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எம்ஐஎம் ஆகிய கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. ஆனால் ஆந்திரத்தைப் பிரிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக, தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வாக்குகளை பெறுவதற்காகவும், மக்களவை சீட்டுக்காகவுமே மாநிலத்தை பிரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்தக் கொள்கை சீமாந்தரா பகுதி மக்களுக்கு செய்யும் பெரிய அநீதியாகும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.