திருவனந்தபுரத்தில், மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா இம்மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதிய சமூகநலத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வல்லிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்தமயி பீடம் ஆஸ்ரமம் உள்ளது. அதன் அருகேயுள்ள அம்ரிதா விஸ்வ வித்யாபீடப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த விழா "அம்ரிதாவர்ஷம்-60' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
விழாவையொட்டி, கல்வி முயற்சி தொடர்பான புதிய அறிவிப்புகள், கலாசார விருது அளிப்பு, ஆன்மிக நூல்கள் வெளியீடு, இந்தியாவின் கிராமப்புற மக்களின் மேம்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் நிறுவனம் ரூ. 50 கோடியில் இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை அளிக்கவுள்ளது.
மேலும், பிறந்த நாள் விழாவையொட்டி, மாதா அமிர்தானந்த மயி மடமும், மடத்தின் மற்ற அமைப்புகளும் இணைந்து ஓராண்டுக்குள் 6 மில்லியன் மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டுள்ளன. அவற்றில் 6 லட்சம் மரக்கன்றுகளை கேரளத்தில் நடத் திட்டமிட்டுள்ளன. இந்தத் தகவலை மாதா அமிர்தானந்தமயி பீடம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

