தொலைக்காட்சி மீது வழக்கு: சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம்
ஜீ தொலைக்காட்சி மீது தொடரப்பட்டுள்ள வழக்கானது, மக்களின் குரலைத் தடுக்கும் முயற்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.


ஜீ தொலைக்காட்சி மீது தொடரப்பட்டுள்ள வழக்கானது, மக்களின் குரலைத் தடுக்கும் முயற்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் நண்பரைப் பேட்டி கண்டு ஒளிபரப்பிய ஜீ செய்தித் தொலைக்காட்சி மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. கண்டித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""தொலைக்காட்சி மீது வழக்கு தொடர்வதன் மூலம் குடிமக்களின் குரலை தில்லி போலீஸால் தடுக்க இயலாது. இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். மக்களுக்கு, உண்மையை அறிவதற்கான உரிமை உண்டு'' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...