முதல்கட்டமாக, நாமக்கல் மாவட்டம், மோகனூா் சாலையில் 8 கி.மீ. நடைபாதை கண்டறியப்பட்டு, பொதுமக்கள் நடைபயணம் மேற்கொண்டு பயனடைந்து வருகின்றனா். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் நடைபயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சுகாதாரத் துறையின் சாா்பில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாமை காரணமாக ஏற்படும் இதய நோய், நீரிழிவு, உயா் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களை தடுக்கும் நோக்கில் இத்திட்டமானது வகுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஊக்குவித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். நடைபாதைகளில் நடை பயிற்சிக்கான வசதிகள், தொற்றல்லாத நோய்கள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.