அபுதாபியில் சத்குரு சேவா சமாஜத்தின் 4வது ஆண்டு விழா
சத்குரு ஞானானந்த சேவை சமாஜத்தின் 4வது ஆண்டு விழாவும், ஞான பால விகார், குருஜி பாலநாட்டிய மண்டலியின் ஆண்டு விழாக்களும் எதிர்வரும் மார்ச் 29, 30, 31 தேதிகளில் அபுதாபியில் நடைபெற இருக்கிறது.


சத்குரு ஞானானந்த சேவை சமாஜத்தின் 4வது ஆண்டு விழாவும், ஞான பால விகார், குருஜி பாலநாட்டிய மண்டலியின் ஆண்டு விழாக்களும் எதிர்வரும் மார்ச் 29, 30, 31 தேதிகளில் அபுதாபியில் நடைபெற இருக்கிறது.
இவ்விழாவுக்கு தென்னாங்கூர் ஞானானந்த கிரி பீடத்தின் தற்போதைய குருவான சுவாமி நிரஞ்சனானந்த கிரி தலைமையில் நடைபெறுகிறது. உலக நன்மைக்காகவும்; அமைதிக்காகவும் மார்ச் 29 அன்று குருஜி திருவடி பூஜையும், நாமசங்கீர்தனமும் நடைபெறும்.
மார்ச் 30 தேதி காலை அபுதாபி இந்திய கலாசார மையத்தில் ஞான பாலவிகார் குழந்தைகளின் பக்தி கலை நிகழ்ச்சிகளும். அன்று மாலை திவ்யநாம நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மார்ச் 31 அன்று சுவாமி நிரஞ்சனானந்த கிரி துபாய், ஷார்ஜாவில் பக்தர்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
சுவாமியின் இந்த சுற்றுபயணத்தில் சென்னை ஜி.ஏ. டிரஸ்ட் உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம்; முத்துசுவாமி; கார்த்திக் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புரவலர் ரெங்கராஜன், தலைவர் ரெகுநாதன், ஹரிஷ், சந்திரசேகர், பாலா, ரமேஷ், ராம்கி, சுமந்த், ஞான பிரகாஷ், பரதன் மற்றும் துபாய் ராமதுரை, வெங்கட்ராமன் மற்றும் பல உறுப்பினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...