தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

மன்மோகன் சிங் வாழ்த்து

பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 மே 2013, 4:59 am IST

பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்காக நவாஸ் ஷெரீபுக்கும் அவரது கட்சிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரு தரப்புக்கும் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு ஷெரீபுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மேலும், வன்முறை தொடர்பான அச்சுறுத்தல்களை முறியடித்து, பெருவாரியாக வாக்களித்த மக்களையும், தேர்தலில் பங்கேற்ற அரசியல் கட்சிகளையும் அவர் வாழ்த்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதில் பாகிஸ்தானின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதை பிரதமர் வெளிப்படுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.