""... புருஷ சிங்கமாகிய விவேகானந்தர் தமது தலையிலே பாகை தரித்து, கையிலே தண்டமேந்தி, ஞான சாந்தி வீசும் முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் கல்லாலடித்த சிலைகள் கூட அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கும்'' என்று மகாகவி பாரதி விவேகானந்தரைப் போற்றிப் புகழ்ந்தார். விவேகானந்தரின் தேச பக்தியைப் பார்த்து வியந்துபோன மகாகவி பாரதி, அதை அப்படியே உள்வாங்கி, அப்பர் சுவாமிகள் இறைவனை நினைந்து பாடிய திருத்தாண்டகத்தை தேசபக்திப் பாடலாக மாற்றினார். ""நான் ஒரு இந்தியன், இந்தியர் அனைவரும் என் சகோதரர், ஒதுக்கப்பட்ட இந்தியனும், ஏழை மற்றும் ஆதரவற்ற இந்தியனும் என் சகோதரர். இந்தியன் எனது உயிர்சக்தி, இந்தியச் சமூகம் எனது குழந்தைப் பருவத்தொட்டில், எனது இளவயது மகிழ்வின் தோட்டம், எனது சொர்க்கம், வயோதிகத்தில் எனது வாரணாசி. இந்திய மண்ணே எனது மிக உயர்ந்த சொர்க்கம், இந்தியாவின் நன்மையே எனது நன்மை! இந்தப் பிரபஞ்சத்தின் அன்னையே, எனது ஆண்மைக்கு சான்று கொடு வலிமையின் அன்னையே, எனது பலவீனங்களை நீக்கிவிடு'' என்ற விவேகானந்தரின் வீர உரையைக் கேட்டு, பாரதி திருத்தாண்டகத்தை, கீழ்க்கண்டவாறு மாற்றிப் பாடினார் :