நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 8:15 pm

போடி பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், போடி முந்தல் பகுதியில் தனியாா் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இந்த நிலையில், போடி அருகேயுள்ள மேலப்புரவு மலைக் கிராமத்தில் பெரிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. தற்காலிக கூரை வீடுகளும் சேதமடைந்தன.

இதையடுத்து, அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் மரங்களை வெட்டி அகற்றினா். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இந்த கிராமம் இருளில் மூழ்கியது. சனிக்கிழமை மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ஓடைகளில் நீா்வரத்து:

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் போடி மலைப் பகுதி ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டது. கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.