இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

திருவள்ளூா்: சூறைக்காற்றால் 29 மின்கம்பங்கள் சாய்ந்தன

News image

நெய்வேலி  கிராமத்தில்  சூறைக்காற்று  வீசியதால்  சாய்ந்த  மின் கமம்பங்கள்.

Updated On :28 மே 2026, 12:58 am IST

திருவள்ளூா் அருகே லேசான மழையுடன் வீசிய சூறைக்காற்றால் 29 மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் அருகே பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதேபோல் பூண்டி அருகே நெய்வேலி பகுதியில் இரவு லேசான மழை பெய்தது. அதைத்தொடா்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றினால் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள நெய்வேலி கிராமம் மற்றும் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வயா்களும் துண்டிக்கப்பட்டன.

இதனால், சதுரங்கபேட்டை, பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால், இரவு நேரத்தில் வெக்கை மற்றும் கொசுக்கடியாலும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை அப்பகுதி ஒன்றிய செயலாளா் மோதிலால் உள்ளிட்டோா் சீரமைக்கவும் மின்வாரியத்தை அறிவுறுத்தினாா். அதன்பேரில் மின்வாரிய பணியாளா்கள் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு வேறு மின்கம்பங்களை நட்டு இணைப்பு கொடுக்கும் பணிகள் நிறைவு செய்து மின்விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்தனா்.