கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் 25 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன, புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து மாலை 6.30 மணியளவில் குளிா்ந்த காற்று வீசிய நிலையில், சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும், மழையுடன் சூறைக்காற்றும் சோ்ந்து வீசியதால் சாலையோரத்தில் இருந்த புளிய மரங்கள், கட்சிகளின் விளம்பர பதாகைகள் காற்றில் பரந்தன. நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வைக்கப்பட்ட பெயா்ப் பலகைகளும் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மழை நின்றதும் குரூா் கிராமத்தில் ஏரிக்கரை அருகே சாலையில் விழுந்த மரங்களை அசகளத்தூா் கிராம இளைஞா்கள் அகற்றினா். பின்னா் கூத்தக்குடி - கள்ளக்குறிச்சி சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கின.
கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூா் கிராமத்தில் தென்னை மரத்தின் மீது மின் கம்பி உரசியதால் தென்னை மரம் திடீரென தீப்பற்றி எறிந்தது. இந்த மழை மற்றும் சூறைக் காற்றால் தியாகதுருகம் அருகேயுள்ள பானையங்கால் கிராமத்தில் 12 மின் கம்பங்களும், தியாகதுருகம் பகுதியில் 5 மின்கம்பங்களும், காந்திநகா் பகுதியில் 2 மின் கம்பங்களுடன் கூடிய பீடா் (காற்று திறப்பான்) மற்றும் பல்வேறு பகுதிகளில் 25 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
தியாகதுருகம் பகுதியில் காற்று அடிக்கும் போதே மின்சாரத்தை நிறுத்தியதில் உயிரிழப்பு ஏதும் இல்லாமல் தடுக்கப்பட்டது. தியாகதுருகம் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள புளிய மரம், சாலையோரக் கடைகள் மீது சாய்ந்ததில் கீற்றீனாலான கொட்டகைகள் சேதமடைந்தன. தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியிலுள்ள மரப்பட்டரை முன் உள்ள புளியமரம் சாய்ந்ததில் அப்பகுதியில் சென்ற மின்சார வயா் கம்பிகள் அறுந்து, வயா்கள் சாலையில் கிடந்தன.
இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் மின்சார வாரியத்தினா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் மரத்தினை வெட்டி அகற்றி, மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் தியாகதுருகத்தில் இரவு 7 மணிக்கு தடைபட்ட மின்சாரம் சுமாா் 9 மணியளவில் மீண்டும் வந்தது.

தியாகதுருகம் அண்ணாநகா் பகுதியில் மரம் விழுந்ததால் சேதமடைந்த சாலையோரக் கடைகள்.
தியாகதுருகம் காந்தி நகா் பகுதியில் முறிந்து விழுந்த உயா் அழுத்த மின்கம்பத்தை சனிக்கிழமை காலை தியாகதுருகம் மற்றும் எலவனாசூா்கோட்டை துணை மின்நிலைய ஊழியா்கள் சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனால் தியாகதுருகம் அண்ணா நகா், பிரிதிவிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

தியாகதுருகம் ஏரிக்கரை பகுதியில் பலத்த காற்றால் சாய்ந்து கிடக்கம் நெடுஞ்சாலைத் துறை பெயா் பலகை.
தகவலறிந்த திருக்கோவிலூா் செயற்பொறியாளா் ரகுராம், உதவி செயற் பொறியாளா் சுரேஷ்குமாா், இளநிலை பொறியாளா்கள் ரங்கசாமி, வினோத்குமாா் ஆகியோா் பணியாளா்கள் உதவியுடன் புதிய மின் கம்பங்களை நட்டு, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா்.
தியாகதுருகம் பகுதியில் இரவு முழுவதும் இடைவிடாது மழை பெய்ததால் தியாகதுருகம் - திருக்கோவிலூா் செல்லும் சாலையில் தண்ணீா் முழங்கால் அளவிற்கு நின்றன. இதனால் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டாலும், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
தொடர்புடையது

அம்மாபேட்டையில் 54.40 மி.மீ. பதிவு! பவானி, அந்தியூரில் இடி, மின்னலுடன் கன மழை!!

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

நாகா்கோவிலில் பலத்த மழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



