"நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் முடங்கியது.
இன்று காலை அவை கூடியதும், அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உலக மனித உரிமை தின செய்தியை படித்தார். அவர் படித்து முடித்ததும், அவைத் தலைவர் அருகே கூடிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளியால் 'ஜீரோ அவர்' மற்றும் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, அவையின் மையத்தில் கூடிய அதிமுக உறுப்பினர்கள், சென்னை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கூச்சல் நிலவியதால், துணைத் தலைவர் குரியன் முற்பகல் 11.30 மணி வரையும், பின்னர் 12 மணி வரையும் அவையை ஒத்திவைத்தார்.
இதனிடையே அவையில் இருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு அமைச்சர்கள் பலர் தயாராக உள்ள நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல் அவையை முடக்குவதாக உள்ளது என்றார்.
சில உறுப்பினர்கள் கேள்வி கேட்க விரும்வில்லை என்றால், அவர்கள் ஏன் பிற உறுப்பினர்களையும் தடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் நக்வி.
காங்கிரஸ் மாநிலங்களவையை 'பணயமாக' பயன்படுத்துகிறது குற்றம்சாட்டிய நக்வி, அவையை பாதுகாக்க தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரார்.
தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


