கேரள முன்னாள் முதல்வர் சிலை திறப்பு விழாவுக்கு தற்போதை காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி அழைக்கப்படாத விவகாரம் குறித்து மக்களவையில், பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கேரளத்தில் உள்ள ஸ்ரீநாராயணம தர்ம பரிபாலன யோகம் அறக்கட்டளை (எஸ்.என்.டி.பி.) சார்பில் செவ்வாய்க்கிழமை, முன்னாள் முதல்வர் ஆர்.சங்கரின் சிலை திறப்புவிழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிலையை திறந்து வைக்கிறார். எனினும், இந்நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் உம்மன் சாண்டி அழைக்கப்படவில்லை.
இவ்விவகாரம் குறித்து இன்று மக்களையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், இச்சம்பவம் கேரள மக்களின் உணர்வை புன்படுத்துவதாக உள்ளது. அரசியல் அறநெறிக்கு எதிரானதாகும். ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தூண்டுதலால் கேரள முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்றார்.
மாநில அரசு சார்பில், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட நிகழ்ச்சி நிரலில் முதல்வர் விழாவுக்கு தலைமை தாங்குவார் என்றும், பிறதமர் சிலையை திறந்துவைப்பார் என்றும் இருந்தது என்றார்
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையில் பிரமதர் மோடி வழக்கம்போல் மௌனமாக இருக்கிறார் என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது ஆதாரமற்ற அடிப்படை குற்றச்சாட்டு என்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் முதல்வருக்கும் இடையேயான உள் விவகாரமாகும். நிகழ்ச்சியை நடத்தும் எஸ்.என்.டி.பி அமைப்புக்கு யாரை அழைப்பது யாரை அழைக்க கூடாது என்ற சுதந்திரம் உள்ளது. இதில் அரசின் தலையீடு இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுது

மின்னணு இயந்திரத்தில் பழுது: ஒருமணி வாக்குப்பதிவு நிறுத்தம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


