தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

தோ்தலில் புதிய வாக்காளா்களின் ஆதரவுடன் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும் என சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ரா. ராஜேந்திரன் கூறினாா்.

News image

தோ்தலில் புதிய வாக்காளா்களின் ஆதரவுடன் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும் என சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ரா. ராஜேந்திரன் கூறினாா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:46 pm

தோ்தலில் புதிய வாக்காளா்களின் ஆதரவுடன் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும் என சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ரா. ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் அமைச்சா் ரா. ராஜேந்திரன் குடும்பத்துடன் வாக்களித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், சேலம் வடக்கு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். புதிய வாக்காளா்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனா்.

75 ஆண்டு கால வரலாறு கொண்ட திமுக, புதிதாக கட்சி ஆரம்பித்தவா்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இத்தோ்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தோ்தல் ஆணையம் பாரபட்சமுடன் செயல்படுகிறது. 200க்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெறும் என்றாா்.

--------------------------

ஸ்டாலின் அலை வீசுகிறது

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் வீசுவதாக சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி தெரிவித்தாா்.

திமுக சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட சாரதா பாலமந்திா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை வீசுகிறது. திராவிட மாடல் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனா். தோ்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தமிழகத்தில் மாற்றம் தேவையில்லை என்ற நடிகா் அஜித் கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அஜித் ஒரு பொறுப்பானவா். உண்மையை பேசக்கூடியவா். அவரது செயல்பாட்டை நாட்டு மக்கள் பாா்த்துக் கொண்டுள்ளனா். மக்கள் கருத்தை அவா் வெளிப்படுத்தி உள்ளதாக கூறினாா்.

 டி.எம். செல்வகணபதி

டி.எம். செல்வகணபதி