தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பருவநிலை மாநாட்டில் இந்தியாவின் நிலை: இனவிரோத கார்டூன் வெளியிட்ட ஆஸ்திரேலிய நாளிதழ்

பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலையை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்று இனவிரோத கார்டூனை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2015, 3:42 pm

பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலையை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்று இனவிரோத கார்டூனை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில், புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குறைக்க வேண்டும். புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டுக்கு முதல் வளரும் நாடுகளுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6,70,000 கோடி) ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளரும் நாடுகளுக்கு சாதகமான அம்சங்கள் அடங்கிய இந்த ஒப்பந்தம் இந்தியா, சீனா, அமெரிக்கா நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தியா ஆதரவுடன்  சர்வதேச அளவிலான சூரிய ஒளி கூட்டமைப்பும் தொடங்கப்பட்டது.

இவற்றை எல்லாம் கிண்டல் செய்யும் வகையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் நாளிதழ் 'தி ஆஸ்திரேலியன்' ஒரு கார்டூன் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் சிலர் சூரியஓளி சோலார் பேலன்களை உடைத்து, மாங்காய் சட்னி தொட்டு சாப்பிடுவது போல் உள்ளது.

இணையதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த கார்டூனுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இனவிரோதத்தை வளர்க்கும் வகையில் உள்ளது என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.