தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னைக்குப் பதில் மைசூர் சோதனை மையத்தில் மேகி சோதனை

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2015, 10:33 am

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

லக்னோவில் உள்ள மெகி குடோன்களிலிருந்து மாதிரிகளை எடுத்து சென்று சோதனை நடத்துமாறு மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பாண்ட் ஆகியோர் இன்று உத்தரவிட்டனர்.

முன்னதாக கடந்த 9 ஆம் தேதி தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் வெளிட்ட உத்தரவில், மேகி நூடுல்ஸை சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வு செய்ய வலியுறுத்தியிருந்தது.

இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ல மத்திய அரசு சோதனை மையத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், தரம்குறைந்த மேகி நூடுல்ஸை விற்பனை செய்தது தொடர்பாக ரூ. 640 கோடி கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம்  தொடர்ந்து நடத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.