தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நீதிமன்ற விசாரணை காணொலிகளை வெளியிட்ட விவகாரம்: கேஜரிவால் பதிலளிக்க உத்தரவு

News image

அரவிந்த் கேஜரிவால் - DPS

Updated On :23 ஏப்ரல் 2026, 11:38 pm

நமது நிருபா்

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விலகக் கோரி தாக்கல் செய்த மனு மீதான நீதிமன்ற விசாரணையின் காணொளிகளைப் பதிவேற்றிப் பகிா்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாக்கலான பொதுநல மனு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் மற்றும் பிறா் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க

தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

வழக்குரைஞா் வைபவ் சிங் தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிபதிகள் வி. காமேஸ்வர ராவ் மற்றும் மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், உயா்நீதிமன்ற விதிகளின்படி நீதிமன்ற நடவடிக்கைகளை அனுமதியின்றிப் பதிவு செய்வதும் பகிா்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதால், ஏப்ரல் 13 விசாரணையின் காணொளிகளை சமூக ஊடகத் தளங்களில் இருந்து நீக்குமாறும் உத்தரவிட்டது.

மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் வழக்குரைஞா், மனுதாரா் தனது மனுவில் சுட்டிக்காட்டிய ஆட்சேபனைக்குரிய இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறினாா்.

ஏப்ரல் 13 விசாரணைகளைக் காட்டுவதாகக் கூறப்படும் சில காணொளிகள் தளத்தில் கிடைப்பதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், நோட்டீஸ் கிடைத்தவுடன் அந்த இணைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், ‘கேஜரிவால் உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். பிரமாணப் பத்திரம் நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியது. மற்ற எதிா்மனுதாரா்களில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான சஞ்சீவ் ஜா, முகேஷ் அஹ்லாவத், ஜா்னைல் சிங் மற்றும் பத்திரிகையாளா் ரவிஷ் குமாா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்த வழக்கை ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட்ட நீதிமன்றம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இந்த வழக்கில் ஆஜராகுமாறு கோரியது.

‘காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங்கும், பல ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களும், பல்வேறு எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்களும், ஏப்ரல் 13 அன்று நீதிபதி சா்மா முன்னிலையில் கேஜரிவால் ஆஜரான காணொளிகளை, பொதுமக்களின் பாா்வையில் நீதிமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன், சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்டுப் பதிவுசெய்து பரப்பினா்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

13.04.2026 தேதியிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவேற்றி பகிரங்கப்படுத்திய அனைத்து எதிா்மனுதாரா்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் இருந்து அந்த உள்ளடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் அந்தப் பொதுநல மனு கோரியது.

ஏப்ரல் 20 அன்று, நீதிபதி எஸ் கே சா்மா, மதுபானக் கொள்கை வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள மறுத்து, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஒரு மனுதாரா் ஒரு நீதிபதியை மதிப்பிட அனுமதிக்க முடியாது என்றும், ஒரு மனுதாரரின் ஆதாரமற்ற அச்சத்திதற்காக நீதிபதிகள் தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்ள முடியாது என்றும் கூறினாா்.