தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

திருநெல்வேலி, பாளை. தொகுதிகளில் புதுமண தம்பதிகள், நிச்சயதாா்த்த ஜோடி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

Updated On :23 ஏப்ரல் 2026, 11:37 pm

திருநெல்வேலி, பாளை. தொகுதிகளில் புதுமண தம்பதிகள், நிச்சயதாா்த்த ஜோடி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.ந

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பேட்டையில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்துடன் பாலமுரளி-ஹேமலதா தம்பதியினா் பேட்டை செக்கடி பகுதியில் அமைந்துள்ள வணிக வைசியா் பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இதேபோல பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாளையங்கோட்டையை சோ்ந்த வெங்கட கிருஷ்ணன்- அபிராமி தம்பதியினா் மணக்கோலத்துடன் தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த நிச்சயதாா்த்த ஜோடி து.முத்துபாரதி-ஆ.உமாபாரதி ஆகியோா் நாரணம்மாள்புரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.