பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாக விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ரஞ்சித் இன்று கைது செய்யப்பட்டார்.
போலீஸார், வெளிநாட்டு பெண் பத்திரிக்கையாளர் பெயரில் உருவாக்கியகற்பனையான முகநூல் பக்கம் மூலம் ரஞ்சித் ரகசியங்களை பகிர்ந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
கேரள மாநிலம், மலப்பபுரத்தைச் சேர்ந்தவர் கே.கே.ரஞ்சித். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த அவர் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கத்துக்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் தில்லி போலீஸாரின் குற்றப் பிரிவு, ராணுவ ரகசிய பிரிவு, விமானப்படையின் ஒருங்கிணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு விசாரணையில் ரஞ்சித் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு கடத்தியது தெரியவந்தது.
அவரை கைது செய்வதற்கும், ரகசியங்களை பெறுவதற்கும் போலீஸார் ரகசிய திட்டத்தைச் செயல்படுத்தினர்.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஊடகத்தில் பணியாற்றுவதாக டாமினி மெக்னட் என்ற பெண் பத்திரிக்கையாளர் பெயரில் கற்பனையான ஒரு முகநூல் (ஃபேஸ்புக்)பக்கத்தை உருவாக்கினர்.
அந்த பக்கத்தின் மூலம் ரஞ்சித்தை தொடர்பு கொண்ட போலீஸார், ஒரு கட்டுரைக்காக விமானப்படை குறித்த தகல்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு பணம் தருவதாகவும் கூறினர்.
இதில் மயங்கிய ரஞ்சித், ராணுவ ரகசியங்கள் குறித்த தகவல்களை இ-மெயில் மூலம் அந்த கற்பனையான பெண் பத்திரிக்கையாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். இதற்கு பலனாக ரஞ்சின் வங்கி கணக்கில் போலீஸார் பணம் செலுத்தினர்.
ரஞ்சித், விமானப்படையின் பயிற்சிகள் குறித்த தகவல்கள், படையின் நகர்வுகள் குறித்த தகவல்கள், பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் குறித்த தகவல்களை அளித்தார்.
இதையடுத்து இந்திய ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக தில்லி கூடுதல் ஆணையர் (குற்றம்) அலோக் குமார் கூறினார்.
போலீஸாரின் இந்த ரகசிய நடவடிக்கையால் இதுவரை ஐஎஸ்ஐ அமைப்புக்கு தகவல் அளித்ததாக பணியிலிருக்கும் ராணுவ அதிகாரி, பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


