திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பொதுமக்களை பாதிக்கும் போராட்டம்: முடிவுக்கு கொண்டு வர கேரள அரசு முடிவு

கேரள மாநிலத்தின் முழுஅடைப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சட்டம் இயற்றுவது என ஆளும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2015, 1:09 pm

கேரள மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் அடிக்கடி விடுக்கும் கதவடைப்பு, முழுஅடைப்பு போராட்டம் உள்ளிட்டவைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சட்டம் இயற்றுவது என ஆளும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

வரும் 30 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தின் போது இதற்கான சட்டம் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.

அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் போராட்டங்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி வணிக நிறுவனங்கள், கடைககள், கல்வி நிறுவனங்களை கட்டாயமாக மூட வலியுறுத்துவோர், வாகனங்களின் இயக்கத்தை தடுப்போர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்படுவதோடு, அவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.