மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததால், நெஸ்லே நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மேகி நூடூல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து அந்நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பின்னர், அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், மேகி நூடூல்ஸில் எவ்வித நச்சுப் பொருளும் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியது.
இத்தடையை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. மேலும், மேகி நிறுவனம் அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைத்த மாதிரி மேகி நூடூல்ஸ்களில் நம்பகதன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

