குறைந்தபட்ச கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயக உயர்த்துவது என இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரயில் நிலையங்களுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பிளாட்பாரம் கட்டணத்தை ரூ. 10 ஆக உயர்த்தப்படும் என கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
எனினும், சிறிய தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கான, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 ஆகவே இருந்தது. இதைப் பயன்படுத்தி, பெரும்பாலான பயணிகள் குறைந்தபட்ச கட்டண டிக்கெட்டை எடுத்து கொண்டு ரயில் நிலையத்தில் நுழைந்துவிட்டனர்.
இதனால், ரயில் நிலையங்களுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்ற ரயில்வேயின் குறிக்கோள் நிறைவேறவில்லை.
இதைத்தொடர்ந்து சிறிய தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 10 என உயர்த்துவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எனினும், இந்த கட்டண உயர்வு பெருநகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு பொருந்தாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


