அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் பாகிஸ்தானின் மலலா ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
நடப்பு ஆண்டு செய்திகளில் அதிகமாக இடம்பிடித்தவர்கள், டைம் இதழின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள் என அந்த இதழ் கூறியுள்ளது.
டைம் இதழின் இந்த போட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளிட்ட 58 பேர் பரிசீலனையில் உள்ளனர்.
இந்தியாவில் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஊக்குவித்தது, ஜனநாயகத்தை நவீனப்படுத்த முயற்சிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மோடிக்கு சாதகமாக இருந்த போதும், வலதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகளால் சில எதிர்ப்புகளும் இருக்கிறது என டைம் இதழ் கூறியுள்ளது. கடந்த ஆண்டு போட்டியில் இருந்த மோடி, சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனினும், வாசகர்கள் தேர்வாக இருந்தார். அவருக்கு ஆதரவாக ஐந்து மில்லியன் பேர் வாக்களித்திருந்தனர்.
மேலும், இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் ஒபமா, ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர், ஹிலாரி கிளின்டன், நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா உள்ளிட்ட 58 உலக ஆளுமைகள் உள்ளனர்.
டைம் இதழின் ஆசிரியர் குழு இவர்களிலிருந்து ஒருவரை தேர்ந்தேடுத்து இந்த ஆண்டின் சிறந்த மனிதராக அறிவிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


