கடற்படையில் பெண்களுக்கு நிரந்தர பணி: தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

ராணுவம் மற்றும் விமானப் படைகளைப் போன்று கடற்படையில் உள்ள பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.
Updated on
1 min read

ராணுவம் மற்றும் விமானப் படைகளைப் போன்று கடற்படையில் உள்ள பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.

இந்திய பாதுகாப்புப் படையில் உள்ள ராணுவம் மற்றும் விமானப் படைகளில் 20 ஆண்டுகள் பணியாற்றிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், கடற்படையில் பெண்கள் அதிகபட்சம் 14 ஆண்டுகளே பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், தங்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை என கூறி, கடற்படையைச் சேர்ந்த 10 பெண் அதிகாரிகள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த செம்படம்பர் மாதம், மற்ற ராணவ பிரிவுகளைப் போல் கடற்படையிலும் பெண்கள் நிரந்தரமாக பணியாற்றுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், வி கோபாலா கௌட, ஆகியோர் கடற்படையில் குறைந்தகால பணியில் உள்ள அனைத்து பெண்களையும் நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com