வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் ஆறாவது திருத்தத்தின்படி நாட்டில் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சில வாகனங்களுக்கு விலக்கு அளித்து ஆணையிடப்பட்டது.
அதன்படி, 3500 கிலோவுக்கு குறைவானதும், 8 இருக்கைகளுக்கு மிகாத நான்குசக்கர வாகனங்கள் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சுரக்க்ஷா பவுண்டேஷன் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களாலேயே அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என். வி. ரமணன் ஆகியோர், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளுக்கான கொள்முதல் தொடங்கி அதை பொருத்துவது வரை, ஒரு தெளிவான வரைமுறைகளை வகுக்கவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

