பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களே அதன் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய, பாஜக தலைவர் அத்வானி, தற்போது அரசு சரியான பாதையில் செல்வதாக கூறினார்.
குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை தேர்தல் வாக்குறுதியான அச்சே தின் (நல்லகாலம் வருகிறது) விரைவில் வரும் என்றார் அத்வானி.
பிகார் தேர்தல் கோல்விக்கு பிறகு நடைபெறும் இத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அத்வானி, குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரதீய ஜனதா கட்சி கடுமையாக உழைத்துள்ளது. எனவே, உறுதியாக வெற்றி பெறும் என்றார்.
மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்கள் போன்று உள்ளாட்சி தேர்தல்களும் முக்கியமானவை என்றார் அத்வானி. குஜராத் உள்ளாட்சித் தேர்தல்ளில் முன் முறையாக 50 சதம் இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிகார் பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியடைந்த பின்னர், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் முன்னணியிலிருந்து செயல்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


