சகிப்பின்மை குறித்து தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன். இந்தியனாய் இருப்பதற்கு பெருமைபடுகிறேன் என ஆமிர்கான் கூறியுள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, ஆமிர்கான் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்தார். நாடு முழுவதிலும் இருந்தும் அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
முதலில் நான் தெரிவிப்பது என்னவென்றால், எனக்கோ எனது மனைவிக்கோ நாட்டை விட்டுவெளியேறும் எண்ணமில்லை என்றார் ஆமிர்கான். மேலும் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் இல்லை. இனி வெளியேற போவதுமில்லை என்றார்.
எனது கருத்துக்கு எதிர்வினை ஆற்றுவோர் எனது பேட்டியை முழுமையாக கவனிக்காமல் வேண்டுமென்றே திரித்து கூறுகின்றனர்.
இந்தியா எனது தாய்நாடு, அதை நான் நேசிக்கிறேன், இந்தியனாய் இருப்பதற்கு பெருமைபடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
எனினும், சகிப்பின்மை குறித்து தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ள ஆமிர்கான், இதற்காக நான் யாருடைய ஒப்புதல் அல்லது அனுமதி பெற தேவையில்லை என்றார்.
தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர் கான், இந்தியாவில் நிலவும் சகிப்பின்மையால், நாட்டை விட்டு வெளியேறி விடலாமா அவரது மனைவி கிரண் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
நாட்டில் அமைதியின்மை அதிகரித்து வருவதாலும், குழந்தைகளின் பாதுகாப்பை கருதியும் கிரண் இவ்வாறு கூறியதாக அமீர் கான் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


