ஒடிசா மாநில காவல்துறைக்கான பிரத்யேக இணையதளம் துவக்கம்

ஒடிசா மாநில காவல்துறைக்கு என பிரத்யேக இணையதளத்தை, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துவக்கி வைத்தார்.
Updated on
1 min read

ஒடிசா மாநில காவல்துறைக்கு என பிரத்யேக இணையதளத்தை, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கவும், காவல்துறையின் பல சேவைகளை அறிந்து கொள்ளவும் இனி மக்கள் காவல்நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் இருந்தபடியே, தங்களது புகார்களை பதிவு செய்யும் வசதி இந்த இணையதளத்தில் இருப்பதாக நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

ஒடிசாவில் உள்ள 531 காவல்நிலையங்களும் www.citizenportal.op.gov.in என்ற இணையதளம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புகார்களைப் பதிவு செய்வதோடு மட்டும் அல்லாமல், தங்களது புகார்கள் மீதான விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும் பொதுமக்கள் இணையதளம் மூலமாகவே அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com