தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

இந்திய - அமெரிக்க வர்த்தகத்தை ரூ.33 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு: அருண் ஜேட்லி

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை அடுத்த சில ஆண்டுகளில் ரூ.33 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று

Published On :

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை அடுத்த சில ஆண்டுகளில் ரூ.33 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 இந்த இலக்கை எட்டுவதற்கேற்ப, நிலையான வரி விதிப்பு முறையைக் கொண்டு வருவது உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
 பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதியில் இரண்டாவது முறையாக அமெரிக்கா செல்ல உள்ளார்.
 அவரது இந்தப் பயணத்தையொட்டி, 11-ஆவது இந்திய-அமெரிக்க பொருளாதாரக் கருத்தரங்கம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 அதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:
 இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறை, உற்பத்தித் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் தொடங்க, உலக முதலீட்டாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வகையிலும், இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் நிலையான வரிவிதிப்பு முறையைக் கொண்டு வருவது, தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்படும்போது, இந்தியா மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையும். அத்தகைய வளர்ச்சியின் மூலம், நாட்டின் வறுமையை ஒழிக்கலாம்.
 பல்வேறு துறைகளில் இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு, தற்போது ரூ.6.6 லட்சம் கோடியாக உள்ளது. இதனை, அடுத்த சில ஆண்டுகளில் 5 மடங்காக (சுமார் ரூ.33 லட்சம் கோடி) உயர்த்துவதில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உறுதிபூண்டுள்ளனர்.
 உலக அளவில் பொருளாதார தேக்கநிலை நிலவி வந்தாலும், இந்தியாவின் பொருளாதார அடித்தளம் ஸ்திரமாக உள்ளதால், இந்த இலக்கை நம்மால் அடைய முடியும் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
 கச்சா எண்ணெய்யை நாம் அதிக அளவில் இறக்குமதி செய்வதால், சர்வதேசச் சந்தையில் அதன் விலை குறைவது நமக்கு சாதகமான அம்சம்தான். இதன் பயனாக மிச்சமாகும் பணத்தை நாட்டின் உள்கட்டமைப்பு, ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவை தொடர்பான திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உலக அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள இதுவே சிறந்த தருணமாகும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.