முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

தில்லியில் டெங்குவுக்கு மேலும் இருவர் பலி: கடந்த ஒரு வாரத்தில் 600 பேர் பாதிப்பு

தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published On :

தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சியின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:  தில்லியில் நிகழாண்டு ஜனவரி முதல் கடந்த 12ஆம் தேதி வரை மொத்தம் 1872 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 டெங்குவால் பாதிக்கப்பட்டு, ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை அனிஷ்கா கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தது. அதேபோல, ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுர்ஜீத் சிங் (52) என்பவரும் உயிரிழந்துள்ளார்.

 இதைத் தொடர்ந்து, தில்லியில் டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, தில்லியில் டெங்கு நோய் சிகிச்கைக்கு வரும் நோயாளிகளுக்காக படுக்கை வசதிகளை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.