சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

மேற்கு வங்கம்: மம்தா உத்தரவின் பேரில் திரிணமூல் எம்எல்ஏ கைது

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த மோதலில் தொடர்புடைய

Published On :

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த மோதலில் தொடர்புடைய ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தீபக் ஹல்தரை கைது செய்யுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதன்படி, எம்எல்ஏ தீபக் ஹல்தரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
 தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர்சந்த் கல்லூரியில் திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அணியின் இரண்டு பிரிவினருக்கு இடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.
 ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த மோதலில் இரு தரப்பினரும் உருட்டுக்கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் நடைபெற்றபோது, எம்எல்ஏ தீபக் ஹல்தர் சம்பவ இடத்தில் இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ""தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர்சந்த் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மோதலில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்எல்ஏ தீபக் ஹல்தரை கைது செய்யுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்'' என்றார்.
 மேற்கு வங்க மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் கல்லூரி வளாக மோதல்களில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரை கைது செய்யுமாறு, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.