ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

தேரா சச்சா தலைவருக்கு மன்னிப்பு:"அகால் தக்த்தின் முடிவை சீக்கியர்கள் ஏற்க வேண்டும்'

""சீக்கிய மதத்தினரின் உணர்வுகளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மன்னிப்பு வழங்கி அகால் தக்த் எடுத்த முடிவை, சீக்கியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் அவதார் சிங் மக்கார் தெரிவித்தார்.

Published On :

""சீக்கிய மதத்தினரின் உணர்வுகளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மன்னிப்பு வழங்கி அகால் தக்த் எடுத்த முடிவை, சீக்கியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் அவதார் சிங் மக்கார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சண்டீகரில் அவர் சனிக்கிழமை கூறியதாவது:

அகால் தக்த் அமைப்பின் தலைவர்கள் எடுக்கும் முடிவை, ஒவ்வொரு சீக்கியரும் மதித்து நடத்தல் அவசியமாகும்.

தேரா சச்சா சௌதாவின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மன்னிப்பு வழங்கி

அகால் தக்த் அமைப்பு எடுத்துள்ள முடிவை எதிர்க்கக் கூடாது. அதை, அனைத்து சீக்கியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவதார் சிங் மக்கார்.

சீக்கிய மதத்தின் 10-ஆவது குருவான கோவிந்த் சிங் போன்று உடையணிந்தபடி தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங், கடந்த 2007-ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

இதன்மூலம், சீக்கியர்களின் உணர்வுகளை அவர் அவமதித்துவிட்டார் என்று புகார் எழுந்தது.

இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அகால் தக்த் அமைப்புக்கு ராம் ரஹீம் சிங் கடிதம் எழுதினார். அதையடுத்து, அவருக்கு மன்னிப்பு வழங்குவதாக அகால் தக்த் வியாழக்கிழமை அறிவித்தது. எனினும், இதற்கு சீக்கிய அமைப்பினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.