சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

புதிய இணையதள சேவை தொடங்கினார் அமித் ஷா

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தனது பெயரில்  www.amitshah.co.in' என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.

Updated On :

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தனது பெயரில்  www.amitshah.co.in' என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.

இதையொட்டி, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

ஊடகங்களிடம் தொடர்ச்சியாக நான் தொடர்பில் இருப்பதில்லை என்று பரவலாக என் மீது சிலர் புகார் கூறுகின்றனர். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அக்குறைகளைத் தீர்க்கும் வகையில் மக்களிடம் எனது கருத்துகளைத் தெரிவிக்க புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளேன். இதன் மூலம் எனது கருத்துகள், பாஜகவின் செயல்பாடுகள், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசின் செயல்பாடு ஆகியவை தொடர்பான கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

கட்சித் தொண்டர்களும் இந்த இணையதளம் மூலமாக என்னுடன் தொடர்பில் இருக்கலாம். இந்த இணையதள சேவை பராமரிப்பு பொறுப்பை கட்சியின் அமைப்பு பொதுச் செயலர் ராம் லாலிடம் ஒப்படைத்துள்ளேன்.

ஒரு வாரத்தில் இதன் அனைத்து பக்கங்களும் முழுமையாகச் செயல்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.