கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்தது ஒரு 'விபத்து': கட்டுமான நிறுவனம்

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் ஒரு 'விபத்து', அது 'யார் கையிலும் இல்லை' என்று கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்தது ஒரு 'விபத்து': கட்டுமான நிறுவனம்
Updated on
1 min read

ஹைதராபாத்: கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் ஒரு 'விபத்து', அது 'யார் கையிலும் இல்லை' என்று கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த மேம்பால கட்டுமான நிறுவனமான ஐவிஆர்சிஎல் அதிகாரி ஒருவர், 'இது கடவுளின் செயல்' என்று கருத்துக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில், மற்றொரு அதிகாரி பேசுகையில், மேம்பால கட்டுமானத் தரத்தின் மீது எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு விபத்து. இது யார் கையிலும் இல்லை. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.  விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com